Vice Chancellor post was sold for Rs 40-50 crore: தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50 கோடிக்கு விற்பனை: பஞ்சாப் ஆளுநர்

சண்டிகர்: Punjab Governor said that “the post of Vice-Chancellor was sold for Rs 40-50 crore” in Tamil Nadu. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 முதல் 50 கோடிக்கு விற்கப்பட்டதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை தெரிவித்தார்.

பஞ்சாபில் செய்தியாளர்களிடம் பேசிய புரோகித், பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணிகளில் தலையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, துணைவேந்தர்கள் நியமனத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, தனது அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகக் கூறி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்தேன். அங்கு மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டத என்று குற்றம்சாட்டினார் புரோகித்.

தமிழகத்தில் நான் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி 27 பல்கலைக்கழகங்களுக்கு வி.சி.க்களை நியமித்தேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை அவர்கள் (பஞ்சாப் அரசு) என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர், திறமையற்றவர் என்று கூட எனக்குத் தெரியாது. கல்வி மேம்படுவதை நான் பார்க்கிறேன். எனவே பல்கலைக்கழகங்களின் பணிகளில் மாநில அரசு தலையிட முடியாது என்றார்.

பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுகிறார் என்று பஞ்சாப் அரசு கூறுகிறது; பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணை வேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை கடிதம் அனுப்பியது. நியமனத்தில் கவர்னருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்? என்று கேட்டார் புரோகித்.

டாக்டர் சத்பீர் சிங் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது யுஜிசி வகுத்துள்ள விதிமுறைகளின்படி செய்யப்படாததால் அது சட்டவிரோதமானது என்று பஞ்சாப் ஆளுநர் அக்டோபர் 18 அன்று மானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.