Varamahalakshmi fast : கர்நாடகத்தில் நாளை உற்சாகமாக கொண்டாடப்படும் வரமஹாலக்ஷ்மி நோன்பு

பெங்களூரு : Varamahalakshmi fast will be celebrated in Karnataka : கர்நாடகத்தில் வெள்ளிக்கிழமை வரமஹாலக்ஷ்மி விரதம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் (Celebrated by married women) முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பாகும். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை. இளமை, துணிவு, நோயின்மை வாழ்நாள் போன்ற 16 வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி திருமணமான இந்து பெண்களால் கடைபிடிக்கப்படுவதே வரமஹாலக்ஷ்மி விரதம் (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) ஆகும்.

கன்னடர்களின் இந்து நாள்காட்டிபடி ஸ்ராவணா மாதத்தில்(தமிழர்களுக்கு ஆடி மாதம்) வளர்பிறையில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். கர்நாடகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் வரமஹாலட்சுமி விரதம், ஜூலை 5 ஆம் தேதி (July 5th) (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

பூஜைபொருட்கள்:
வரமஹாலக்ஷ்மி விரதத்திற்காக‌ பூஜைபொருட்களை வாங்க மக்கள் கடைகளில் மொய்த்திருந்தனர். கரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையில், குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு வரமஹாலட்சுமி விரதத்திற்கான முன்னேற்பாடுகளில் பெண்கள் ஈடுபட்டனர். பெங்களூரு மட்டுமல்லாது மைசூரு, கலபுர்கி, ஹுப்பள்ளி, பெலகாவி, கோலார், ராய்ச்சூரு (Mysuru, Kalaburki, Huballi, Belagavi, Kolar, Raichur) போன்ற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வரமஹாலட்சுமி விரதத்திற்காக‌ பெண்கள் தயாராகி வருகிறார்கள். வீட்டை சுத்தம்செய்வது முதல், பூஜைப்பொருட்களை வாங்கி வருவது வரையில் பெண்கள் மும்முரமாக இருந்துவருகிறார்கள்.கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்மக்கள் வரமஹாலக்ஷ்மி விரதத்திற்கு பிறகு தமது பொருளாதாரநிலை மேம்படும் நம்பிக்கையில் உற்சாகமாக விரதத்திற்காக‌ தயாராகி வருகிறார்கள்.

செல்வம், பூமி, அன்பு, புகழ், ஞானம், அமைதி, மனநிறைவு மற்றும் வலிமை ஆகிய எட்டு தெய்வங்கள் அஷ்டலட்சுமிகள். எட்டு லக்ஷ்மிகள் பின்வருமாறு:

ஆதி லட்சுமி (பாதுகாவலர்)
தன லட்சுமி (செல்வத்தின் தெய்வம்)
தைரிய லட்சுமி (தைரியத்தின் தெய்வம்)
சௌபாக்ய லட்சுமி (செழிப்பின் தெய்வம்)
விஜய லட்சுமி (வெற்றியின் தெய்வம்)
தன்ய லட்சுமி (ஊட்டத்தின் தெய்வம்)
சந்தான லட்சுமி (சந்ததிகளின் தெய்வம்)
வித்யா லட்சுமி (ஞானத்தின் தெய்வம்)

வரமஹாலக்ஷ்மி விரதம் பூஜை

லட்சுமி தேவிக்கு பெண்களால் பூஜை வடிவில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த பூஜைக்கு குங்குமம், சிந்தூர், அக்ஷதை, ஹரித்ரா, சந்தனம், டோரா கிரந்தி, வஸ்திரம், கபூரா, யக்ஞோபவீதம், தூபக் குச்சிகள், பீடம், ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி சிலை, கலசம், மாலைகள், பஞ்சபாத்திரம், அர்க்கியபாத்திரம், புதிய பழங்கள், பூக்கள், இனிப்புகள் மற்றும் பல பொருட்கள் தேவை.

வரமஹாலக்ஷ்மி விரதப் பூஜை (Varamahalakshmi fast puja) விதி

வரமஹாலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். புனித கங்கை நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பின்னர் வரமஹாலக்ஷ்மி சிலைக்கு நகைகள், புதிய ஆடைகள், குங்குமம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பின்னர் கிட்டில் இருந்து மீதமுள்ள பொருட்களும் வழங்கப்படுகின்றன. சிலையின் ஆரத்தி தியா, தூபக் குச்சி மற்றும் கபூரா ஆகியவற்றால் செய்யப்படுகிறது. பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.

வரமஹாலக்ஷ்மி விரதம் கடைபிடிப்பவர்கள் பூஜை வரை எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும், பக்தர்கள் பிரசாதம் மற்றும் சில பழங்களை உட்கொள்ளலாம். இருப்பினும், அடுத்த நாள் வரை அவர்கள் வேறு எதையும் சாப்பிடக்கூடாது.