DGP Praveen Sood : கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை : டிஜிபி பிரவீன் சூத்

மங்களூரு : Additional security measures in coastal districts : கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 10 நாள்களில் 3 கொலைச் சம்பங்கள் நடந்துள்ளன. மசூத் கொலை வழக்கில் 8 பேரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரவீன் நெட்டாரு கொலை (Praveen Nettaru murder case) வழக்கில் 2 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். விரைவில் இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்.

மாநிலத்தின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் கன்னட ((South Kannada District) மாவட்டத்தில் போலீஸ் காவல் சற்று குறைவாக உள்ளது. இதனை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல கடலோர மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

ஃபாசில் கொலை வழக்கில் முக்கியமான துப்பான கார் கிடைத்துள்ளது. அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளோம். அவர் தரும் தகவலையடுத்து கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களையும் (Those involved in the crime of murder) கைது செய்வோம். இது குறித்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் கூட்டம் நடத்தப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

குற்றங்கள் தடுப்பது குறித்துப் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்படும். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முதல்வர் பசவாஜ் பொம்மையின் (CM Basavaj bommai) கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன் என்றார்.

இந்த நிலையில் மங்களூரு பெல்லாரெவைச் சேர்ந்த பிரவீன் நெட்டாறு கொலை வழக்கு தொடர்பாக இருவரை பெங்களூரில் (In Bangalore) போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பிரவீன் நெட்டாறு கொலை வழக்கு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பாஜக பிரமுகரான பிரவீன் நெட்டாறு கொலை செய்யப்பட்டதையடுத்து, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.