Train stop at Pampan Bridge: பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: Southern Railway has announced that train services will be suspended at Pampan Bridge. பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிக்காக, நிபுணர்களின் ஆலோசனையின்படி, பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்களின் இயக்கம் தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மறு ஆலோசனை வரும் வரை, கீழ்க்கண்ட ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படும்.

ரயில் எண்.16618 கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமைகளில் 19.45 மணிக்கு, கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வரை செல்லும், அங்கிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படாது.

ரயில் எண்.16617 ராமேஸ்வரத்தில் இருந்து கோயம்புத்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமைகளில் 19.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படாமல் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும்.

ரயில் எண்.16734 குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் (சேலம், நாமக்கல், கரூர் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமைகளில், ஓகாவில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமைகளில் ராமேஸ்வரம் சென்று வந்தது. இந்த ரயில் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஓகாவிலிருந்து மண்டபம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை ஓடாது.

ரயில் எண்.16733 ராமேஸ்வரம் – ஓகா (கரூர், நாமக்கல், சேலம் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து 22.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை ரயில் இயக்கப்படாது. அது மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஓகா வரை செல்லும்.

ரயில் எண்.07355 கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் (ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ், சனிக்கிழமைகளில் ஹுப்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படாது.

ரயில் எண்.07356 ராமேஸ்வரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி வரை செல்லும் (கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 21.00 மணிக்கு புறப்பட்டு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக திங்கள்கிழமை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு ஹூப்ளி வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.