Traffic diversion in Poondamalli : மெட்ரோ ரயில் பணிகளுக்காக‌ பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: Traffic diversion in Poondamalli for metro rail works : மெட்ரோ ரயில் 4 ஆவது வழித்தடத்தின், 2 ஆம் கட்டப் பணிகளுக்காக பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் (Avadi Police Commissionerate) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை , பூந்தமல்லி டிரங்க்சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி புறவழிச்சாலை பகுதியில் பின் வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 22-11-2022 முதல் 11-02-2023 வரை பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறைப்படுத்தப் பட உள்ளது.

எனவே, பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் (Vehicles coming from Sriperumbudur area towards Chennai), பூந்தமல்லிக்கு முன்பாக, சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடது புறம் திரும்பி, மீஞ்சூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கமாக சென்னை வெளி வட்டசாலையின் அணுகுச் சாலையில் இடதுபுறம் திரும்பிச் செல்கின்றன. அப்படி வரும் வாகனங்கள் வழக்கமாக இடது புறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல், இனி முக்கியச் சாலையிலேயே அங்கிருந்து 200 மீட்டர் தாண்டிச் சென்று இரண்டு வெளிவட்ட சாலை பாலங்க ளுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாக செல்ல வேண்டும்.

சென்னை வெளிவட்டச் சாலையில் வண் டலூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் இடது புறம் திரும்பி, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, பூந்தமல்லி நோக்கிச் செல்கின்றன. அந்த வாகனங்கள், பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்டச் சாலை பாலத்திலிருந்து இடது புறம் திரும்பாமல், இனி சென்னை வெளிவட்டச் சாலையிலேயே நேராகச் சென்று கோலப்பன்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறமாக ‘யூ’ வடிவில் . திரும்பி, சென்னை வெளிவட்டச் சாலையிலேயே – பூந்தமல்லி புறவழிச்சாலை பகுதி வரை வர வேண்டும். பின்னர், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்குச் சென்றடையலாம். மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் (Public should give full cooperation to this transport change) என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.