Weekly special trains : தமிழகம் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள்

சென்னை: Weekly special trains to northern state via Tamil Nadu : தமிழகம் வழியாக பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் வழியாக இயக்கப்படுகின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: பீகாரிலிருந்து பெங்களூருவுக்கு (ரயில் எண்.03253) வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 28, டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. பீகாரில் இருந்து திங்கள்கிழமை மாலை 6.10 – க்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை (Perambur, Katpadi, Jolarpet) வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

மறுமார்க்கமாக (ரயில் எண். 03254) நவம்பர் 24, டிசம்பர் 1, டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை காலை 7.50 – க்கு புறப்படும் ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக சனிக்கிழமை காலை 8 மணிக்கு பீகார் சென்றடையும் (It will reach Bihar at 8 AM on Saturday morning via Jolarpet, Katpadi, Perambur).

பீகாரில் இருந்து எர்ணாகுளத்திற்கு (ரயில் எண்.05555) நவம்பர் 28, டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இரவு 9.15.மணிக்கு பீகாரில் இருந்து புறப்படும் ரயில் புதன்கிழமையன்று பெரம்பூர், காட்பாடி , ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் (Salem, Erode, Coimbatore) வழியாக வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மறுமார்க்கமாக (ரயில் எண்.05556) நவம்பர் 24, டிசம்பர் 1, டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு எர்ணாகுள‌த்திலிருந்து புறப்பட்டு (Departure from Ernakulam on Thursday at 9 pm) வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு பீகார் சென்றடையும்.