Tourists are prohibited from bathing in Suruli and Kumbakkarai waterfalls: சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

தேனி: Tourists are prohibited from bathing in Suruli and Kumbakkarai waterfalls. தேனி சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது, சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆர்ப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. இதனால் அங்குள்ள சில சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாவட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அதேபோல் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடந்த 31ம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்தால் 12வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

ஹைவேவிஸ் மலைபகுதி யில் தொடர்ந்து மழை பெய்ததால் அப்பகுதியின் 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தூவானம், இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

சீரான நீர்வரத்துக்குப்பின் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், தற்போது அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.