Suruli Falls : சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கம்பம்: Tourists are prohibited from bathing in Suruli Falls :தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியின் (Suruli Falls) நீர் வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் அருவிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் வெள்ளிக்கிழமை (Friday) அருவியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர். இது குறித்து வனச்சரக அலுவலர் கூறியதாவது: அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை செய்யப்பட்டது.

மேட்டூர் அணையின் (Mettur Dam) நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  இன்று காலை நீர்வரத்து 4வது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு (For Cauvery Delta Irrigation) வினாடிக்கு 21,500 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் (East West Canal)பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 24 வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.