Today last date College Admission: பொறியியல், கலை அறிவியல் கல்லூரி படிப்புக்கு விண்ணபிக்க இன்றே கடைசி

சென்னை: Today is the last date to apply for College of Engineering, Arts and Sciences: பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று கடைசி நாளாகும்.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதமாக வெளியிட்டதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை ஒத்திவைத்து யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 22-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்வெளியானது. இதனையடுத்து கல்லூரி சேர்க்கை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில், இன்று மாலையுடன் அவகாசம் முடிவடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு:

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.

அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

மாணவர்கள் தாங்களாகவும், தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்விற்கான (Engineering Counselling) விண்ணப்பபதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 18,763 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 4,199 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருந்தது. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு (Engineering Online counselling) நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.