Ramya Pandian Photo Viral: சமூகவலைத்தளத்தில் மாஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்; ரசிகர்கள் பாராட்டு மழை

சென்னை: Mass was given by Ramya Pandian: நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டு மழையில் நனைந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் திரைப்படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைதளங்களிலும் அவரின் போட்டோ ஷூட் படங்களை பதிவிடுவதிலும் அவர் தயக்கம் காட்டவில்லை என்றே சொல்லலாம்.

அவ்வாறு நடிகை ரம்யா பாண்டியனை ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திழுத்தது அவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் தானாம். காட்டன் சேலையில் கவர்ச்சி ததும்ப அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதும், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வந்தது. இதனால் சமூக வலைதளங்களில் அசுர வளர்ச்சி கண்டார் ரம்யா பாண்டியன்.

இவர் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் இவர் போட்டோஷூட் என வந்துவிட்டால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார்.

முதலில் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால், இவரை முன்னுதாரணமாக மற்ற நடிகைகளும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். ஆனால் இவர் அளவுக்கு யாரும் அதில் பாப்புலர் ஆகவில்லை.

மேலும் நடிகை ரம்யா பாண்டியனை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனிலும், அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் இரண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தற்போது வரை அவர் வித்தியாசமான, விதவிதமான போட்டோக்களை பதிவிடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. ரசிகர்களி்ன் மனதை கவர்ந்திழுக்க வித்தியாசமான படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது ஹாலிவுட் ஹீரோயின்களைப் போல் நீளமான கோர்ட் அணிந்து போடோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்த விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை அவரது தம்பி பரசு பாண்டியன் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டீசன்கள் செம மாஸாக உள்ளதாக ஏராளமான கமெண்ட்டுகளை அள்ளிக் குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அருமையாக போட்டோ எடுத்த ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியனுக்கும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படங்களின் வைரலால் அவரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கான முத்தாய்ப்பாக அமைந்துள்ளதே என்று சொல்லலாம். அவரின் டுவிட்டரில் மட்டும் ல் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலோவர்களை வைத்துள்ள அவர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பாராட்டையும், கமெண்டுகளையும் குவித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.