Rain, Holiday for schools :சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: Today is a holiday for schools in Chennai, Thiruvallur and Kanchipuram districts: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழைத் (Northeast Monsoon) தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார் (The district collector has announced a holiday for schools only in Tiruvallur district today). வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் இதனைத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று மழைத் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் (consultation meeting will be held today in the head office under the leadership of the chief minister), அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியத் துறை செயலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions to be taken) தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.