Schools holiday in 8 districts today: 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: Schools holiday in 8 districts today. தொடர் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருவதையொட்டி, தமிழகத்தில் ஆங்காங்கே நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு, கழிவு நீர் வெளியேறுதல் உள்ளிட்ட புகார்களுக்கு பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1913, 044 – 25619206, 044 – 25619207, 044 – 25619208 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.