Tiruvannamalai temple’s Hundi collection Rs.1.34 crores: திருவண்ணாமலை கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.34 கோடி

திருவண்ணாலை: In the Tiruvannamalai Annamalaiyar temple, devotees have paid around ₹1.34 crore and 174 grams of gold and 852 grams of silver as coin offerings in the month of Aippasi. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஐப்பசி மாதம் உண்டியல் காணிக்கையாக சுமார் ₹1.34 கோடி மற்றும் 174 கிராம் தங்கமும், 852 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 6-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற தீபத் திருவிழா இந்த கட்டுப்பாடுகள் தளர்வுடன் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனால் தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் வாகனங்கள் சீரமைக்கும் பணி, மின்விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலாகி உள்ளது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்களையும், உண்டியலில் காணிக்கை செலுத்துவம் வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் பக்தர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 174 கிராம் தங்கம் மற்றும் 852 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.