Free Vetti and saree for Pongal will be completed by 10th January 2023 : ஜன. 10 க்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி முடிக்கப்படும் : தமிழக அரசு

சென்னை: Tamil Nadu government has announced that the distribution of free Vetti and saree for Pongal will be completed by 10th January 2023: பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை 2023 ஜனவரி 10 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 15 டிசைன்களில் புடைவைகளும், 5 டிசைன்களில் வேட்டிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற‌ ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி (Minister R. Gandhi), அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது (Pongal special package gift is given free of cost Vetti and saree). அந்த வகையில் இந்த ஆண்டு பொது மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வழங்க 1.26 கோடி வேட்டி, 99.56 லட்சம் சேலைகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான வேட்டி, சேலை திட்டத்துக்கு (Vetti, saree project for distribution during Pongal festival) முதல் தவணைத் தொகையாக ரூ.243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.