Tiruvannamalai Pournami Girivalam: திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் அலைமோதிய கூட்டம்

திருவண்ணாமலை: Tiruvannamalai Pournami Girivalam has a lively crowd. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலையையே சிவனாக வழிபடும் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை பவுர்ணமி மட்டுமல்லாமல் விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்றும் பாதையில் கிரிவலம் வருவார்கள்.

இந்நிலையில், இம்மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் இரவு முழுவதும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.

மேலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர். பவுர்ணமி நேற்று மாலை 4.35 மணி வரை இருந்ததாலும், பக்தர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து கிரிவலம் சென்றனர். அப்போது பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் சாமி தாிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.