Tiruvannamalai Darshan cancelled: திருவண்ணமாலையில் 7, 8ம் தேதிகளில் தரிசனம் ரத்து

திருவண்ணாமலை: Darshan at Tiruvannamalai on 7th and 8th is cancelled. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணமாலை அருணாசலேஸ்வர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வர பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மகா தீபத்தன்று பன் மடங்கு பக்தர்கள் அதிகரித்து கிரிவலத்திற்கு வந்து செல்வர்.

வழக்கமாக பவுர்ணமி அன்று போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் வரும் 7 மற்றும் 8ம் தேதியும் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் எதிர்வரும் 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய நாட்களில் பொர்ணமி வரவிருப்பதால், 07.11.2022 அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அன்று பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 06.00 வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6.00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேற்படி பௌர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்ப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.