Annamalai anguish for pregnant woman dies: தமிழக கர்ப்பிணி பெண் மரணம்: அண்ணாமலை வேதனை

சென்னை: Annamalai anguish for pregnant woman dies. கர்நாடகத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி, பெங்களூரில் உள்ள பாரதிநகரில் சிறிய வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். கணவர் இறந்ததையடுத்து தனது 6 வயது மகளுடன் 40 நாட்களுக்கு முன்பு துமகூருக்குச் சென்றார். கஸ்தூரிக்கு குடும்ப ஆதரவு இல்லாததால் அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவி செய்து வந்தனர்.

இந்த நிலையில் கர்ப்பிணியான கஸ்தூரி பிரசவ வலி அதிகமானதையடுத்து, இலவச சிகிச்சைக்கான நேற்றிரவுடு தும்மாகூரு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆதார் கார்டு இல்லாததால் அவரை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்தன.

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது.

தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.