Tipper lorry collides with motorcycle: மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்: 2 வயது குழந்தை பலி, பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாக்குமரி: Tipper lorry collides with motorcycle, 2-year-old child killed : கன்னியாக்குமரி மாவட்டம் குமரி மாவட்டம் களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் 30 வயது யகோவா. மீன் வியபாரியான இவர் தனது மனைவி 26 வயது அஸ்வினி மற்றும் 2 வயது குழந்தை மகள் ரித்திகா வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் கேரள மாநிலம் பாறசாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

கேரளா பாறசாலையை அடுத்த காராளி பகுதியில் சென்ற போது எதிரே வேகமாக‌ வந்த டிப்பர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென, இழந்து யகோவா சென்று கொண்டிருந்த‌ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் டிப்பர் லாரி (Tipper lorry) சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த‌ 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தை ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

படுகாயமடைந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த யகோவா, அஸ்வினி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிக்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (Thiruvananthapuram Government Medical College Hospital) அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் யோகாவா, அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமை கவலைக்கிடமாக‌ உள்ளது. விபத்து குறித்து பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற தாய்

பெங்களூரி மன நலம் பாதிக்கப்பட்ட தாய், தனது 4 வயது குழந்தையை 4-வது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து வீசிக் கொன்றுள்ளார் (The mother killed the child ).

பெங்களூரு சம்பங்கிராம்நகரில் வியாழக்கிழமை குழந்தையை வீசிக் கொன்ற தாய், பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது அங்கு இருந்த சிசி டிவியில் பதிவாகி உள்ளது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்றப்போது, மாடியிலிருந்து குழந்தை விழுந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து அந்த குழந்தையின் தாயை போலீசார் கைது செய்தனர் (The police arrested the mother). இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.