Vice President Election : இன்று துணைக் குடியரசு தலைவர் தேர்தல்

தில்லி: Indian Vice President Election today : நாட்டின் துணைக் குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இந்திய துணைக் குடியரசு தலைவர் பதவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் (Venkaiah Naidu) பதை காலம் ஆக. 10 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து துணைக் குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்து, துணைக் குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். துணைக் குடியரசு தலைவர் பதவிக்கு ஆளும் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த மேற்கு வங்கத்தின் ஆளுநராக பதவி வகிக்கும் 70 வயது ஜகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான 80 வயது மார்கரேட் ஆல்வாவும் போட்டி இடுகின்றனர்.

இந்த தேர்தல் குடியரசு தேர்தலை போல இருக்காது. இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்து, துணைக் குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இன்று நடைபெற உள்ள இந்த தேர்தலையொட்டி நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (Appropriate arrangements have been made in Parliament). மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாக்கு மதிப்பில் வித்யாசம் இருக்காது. குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகளுக்கு தனி மதிப்பு இருக்கும். ரகசிய வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடைபெறும்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜகதீப் தன்கர் (Jagdeep Thankar) ராஜாஸ்தானைச் சேர்ந்தவர். இவர் அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் மார்கரேட் ஆல்வாவிற்கு (Margaret Alva) திமுக, தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தெலுங்கானா ராஷ்டிர சமீதி உள்பட 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக மார்கரேட் ஆல்வா 5 முறை எம்.பியாகவும், மத்திய அமைச்சர், ராஜஸ்தான், குஜராத், கோவா, உத்ரகாண்ட் (Rajasthan, Gujarat, Goa, Uttarakhand) ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் மம்தா தலைமையிலான துணைக்குடியரசு தேர்தலை திரினாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. துணைக் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை எண்ணப்பட்டு, மாலையில் முடிவு தெரிந்துவிடும்.

அண்மையில் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி திரௌபதி முர்மு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் எதிர்த்து போட்டியில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.