Tamilisai Soundararajan : இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்கப் பார்க்கின்றனர்: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

கலாசார அடையாளங்களை மறைப்பதற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

கோவை: They are trying to hide the symbols of Hinduism: இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்கப்பார்க்கின்றனர் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றி மாறன் சினிமா என்பது ஏராளமான மக்களை எளிதில் சென்றடையக் கூடிய கலைவடிவம். சிலர் வள்ளுவரை காவி நிறமாக்கி, ராஜராஜ சோழனை (Rajaraja Cholan) இந்து மன்னனாக்குவது போல, தொடர்ந்து எங்கள் அடையாளத்தை எடுத்துக்கொள்கிறார்கள், சினிமாவிலும் அடையாளத்தை ஒதுக்குவது நடக்கிறது. நம் அடையாளத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றார்.

இந்த நிலையில் சென்னையில் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: முதல் பாகத்தை, நடிகர் கமலஹாசன், நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் வியாழக்கிழமை படத்தைப் பார்த்தார். அப்போது ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் இல்லை. அப்போது சைவம், வைணவம் மட்டுமே இருந்தன. இந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் வைத்தது. மொழி அரசியலை (Language politics) திரைத்துறையிலாவது இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை, அவினாசிலிங்கம்களிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவைக்கு வியாழக்கிழமை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது : தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். சிலர் இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்கப் பார்க்கின்றனர். கலாசார அடையாளங்களை மறைப்பதற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் (Everyone should raise their voice against hiding cultural identities). ஏற்கெனவே பல அடை யாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஹிந்து கலாசார அடையாளத்தை மாற்றினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு என்றார்.

மேலும் புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகத்தான் உள்ளது. இருளில் மூழ்கவில்லை. 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. சிலர் செய்த பிரச்னையால் மின்தடை ஏற்பட்டு, மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மின் ஊழியர்கள் தங்களது போராட் டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி(I am happy that the electrical workers have withdrawn their strike) என்றார்.