The police revoked the ban : தென் கன்னட‌ மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஆண்கள் இருவர் உட்கார்ந்து செல்ல விதித்த தடை திரும்பப் பெற்றது காவல்துறை

மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும்.

மங்களூரு: The police revoked the ban on two men sitting on a two-wheeler : தென் கன்னட‌ மாவட்டத்தில் தொடர் கொலை நடந்ததை அடுத்து, சில கட்டுப்பாடுகளை விதிக்க காவல்துறை முடிவு செய்தது. அதன்படி இருசக்கர வாகனங்களில் ஆண்கள் இருவர் செல்ல ஏடிஜிபி அலோக் குமார் தடை விதித்தார்.

காரணம் அண்மையில் நடந்த கொலை சம்பங்களின் போது கொலையாளிகள் பெரும்பாலான நேரங்களில் இருசக்கர வாகனங்கள் வந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனை தடுக்கும் பொருட்டு ஏடிஜிபி இந்த உத்தரவை விதித்தார். ஏடிஜிபி அலோக் குமாரின் இந்த முடிவுக்குப் மாவட்டத்தில் பரவலாக‌ எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மங்களூர் நகர காவல் ஆணையர் இந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார். தென் கன்னட மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளைத் தொடர்ந்து ஏடிஜிபி அலோக் குமார் இன்று இரண்டாவது முறையாக மங்களூருக்கு வருகை புரிந்தார்.. சூரத்கல் பகுதிகளுக்கு சென்ற ஏடிஜிபி அலோக் குமார், அங்கு பொதுமக்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், தென் கன்னட மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில், மாவட்டத்தில் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது என்ற விதி அமல்படுத்தப்பட்டது. இந்த விதி பெண்கள், முதியவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. இவர் பெரும்பாலான நேரங்களில் குற்றவாளிகள் இருசக்கர வாகனங்களில் சென்று கொலை செய்வது தெரிய வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏடிஜிபி அலோக்குமாரின் இந்த முடிவுக்கு மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மங்களூரு மாநகர காவல் ஆணையர் என். சசிகுமார் (Commissioner N.Sasikumar) உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார். இருப்பினும் மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தொடரும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 10 நாள்களில் தென் கன்னட மாவட்டத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பாஜக பிரமுகர் ஒருவரும் கொலை செய்யப்பட்டார். இதனால் மாவட்டத்தில் மட்டுமின்றி மாநில அளவில் இந்து அமைப்புகளிடையே பெரும் கொந்தள்ளிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கொலைகளை தடுக்க தவறியதாக இந்து அமைப்புகள் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டின. இதனால் பாஜக அரசுக்கு சங்கடம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனை அடுத்து எச்சரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள் அதுபோன்றவர்களை அடையாளம் கண்டு சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா (Leader of Opposition Siddaramaiah) தாவணகெரேயில் நடத்திய தனது 75 வது பிறந்த நாளுக்கு எதிர் பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் கூடினர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ள நேரத்தில் பாஜகவிற்கு எச்சரிக்கை மணி அடித்தது போல இதனைக் கண்டனர். இதனையடுத்து பாஜகவை பலப்படுத்தும் நோக்கில், அக்கட்சியினர் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். இதனிடையே மாநிலத்திற்கு பாஜகவின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா பெங்களூருவிற்கு வந்தார். அவர் இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சிக்கு வந்தார் என்றாலும், பாஜகவை பலப்படுத்துவதற்காக அவர் வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மாநிலத்தில் பாஜகவிற்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதால் முதல்வர் பசவராஜ் பொம்மை (CM Basavaraj bommai), மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோர் மாற்றப்பட்டு, அக்கட்சியில் உள்ள வேறு சிலரை முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் பாஜக கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.