Chief Minister M.K.Stalin : பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: The Chief Minister urged the central government to extend the period of crop insurance till November 30 : பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.

அண்மையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் நெல் பயிர்கள் உள்ளிட்டவை தேங்கிய மழை வெள்ளத்தில் மூழ்கியது. மழையால் ஏற்பட்ட சேதங்களை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M.K.Stalin) பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, வடகிழக்குப் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வை இட்டேன்.

இந்தச் சூழலில், விவசாயிகள் தங்களது சம்பா பருவத்துக்கான காப்பீட்டுப் பதிவை கடந்த செப். 15 முதல் செய்து வருகிறார்கள். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளால் (Navratri and Diwali festivals) தொடர்ச்சியான விடுமுறைகள் விடப்பட்டன. இதனால், பொது சேவை மையங்கள், நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இடைவிடாது மழை பெய்து வருவதாலும் விவசாயிகளால் தொடர்ந்து காப்பீட்டுக்கான பதிவை மேற்கொள்ள முடியவில்லை.

எனவே, பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தை நவ. 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் (Nagapattinam, Mayiladuthurai, Tiruvarur, Cuddalore), புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராம‌நாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி , விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். எனவே, பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.