TASMAC: ஒரு பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்

TASMAC bar
ஒரு பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்

TASMAC: நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாற்று எழுந்தது.

அதனால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

அதன்படி இன்று முதல் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் 10 ரூபாய் அதிகம் பெறப்படும். காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து அந்த பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Novak Djokovic: சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து ஜோகோவிச் சாதனை