Novak Djokovic: சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து ஜோகோவிச் சாதனை

novak djokovic
சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை குவித்து ஜோகோவிச் சாதனை

Novak Djokovic: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை 6 – 4, 6 – 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். சர்வதேச டென்னிசில் ஆயிரம் வெற்றிகளை பெற்ற 5-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இந்த சாதனைப் பட்டியலில் முதல் 4 இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் இவான் லென்டில், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க: RRR Movie: மீண்டும் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்