Tamilnadu govt twitter page hacked: தமிழ்நாடு அரசின் டிவிட்டர் பக்கம் ஹேக்.. ஆக்கிரமித்த எலன் மஸ்க்

சென்னை: Twitter page of Tamil Nadu government has been hacked and occupied by Elon Musk’s company. தமிழக அரசின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு எலன் மஸ்க்கின் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் தான் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை விளம்பரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் அரசுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் 14க்கும் மேற்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து, வளர்ந்து வரும் விஞ்ஞான எழுச்சியுடன் புதிய தொழில்நுட்ப உத்திகளையும் வழிமுறைகளையும் பின்பற்றி, மிகச் சிறப்புடன் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு வகுத்து, செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்தும், மக்களுக்கு முழுமையாக சென்றடையவும், மக்களின் பூரண ஒத்துழைப்பைப் பெற்று, அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வெற்றி காணும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சீரிய பணிகள் மேலும் முனைப்புடன் செயல்பட முடுக்கிவிடப்பட்டு, வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் டிஎன்டிஐபிஆர் என்ற டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பதிவுகள் அனைத்தும் எலன் மஸ்க் புகைப்படத்துடன் டெஸ்லா நிறுவனத்தின் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 மணி நேரத்திற்குப் பின்பும் இன்னும் சரி செய்யப்படவில்லை. தற்போது வரை எலன்மஸ்க்கே ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.