Dhoti and saree for Pongal : பொங்கலுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை உற்பத்தி செய்ய ஆணை

ஈரோடு : Order to manufacture Dhoti and saree for Pongal : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க 1.26 கோடி வேட்டி, 99.56 லட்சம் சேலைகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கைத்தறி துறை ஆணையர் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட ஆணை (The order issued by Handloom Department Commissioner Rajesh): 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான வேட்டி, சேலை திட்டத்துக்கு முதல் தவணைத் தொகையாக ரூ .243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . வேட்டி, சேலை உற்பத்தியை அக்டோபர் 1 ஆம். தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக விசைத் தறியில் 99,5683 சேலை உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஈரோடு சரகத்தில் 11,420 தறிகளில் 49,46,683 சேலைகள் , திருச்செங்கோடு சரகத்தில் 6,600 தறிகளில் 35.45 லட்சம் சேலைகள், கோவை சரகத்தில் 1,744 தறிகளில் 9.30 லட்சம் சேலைகள், திருப்பூர் சரகத்தில் 1,605 தறிகளில் 5.25 லட்சம் சேலைகள், திருநெல்வேலி சரகத்தில் 20 தறிகளில் 10,000 சேலைகள் என மொத்தம் 21,389 தறிகளில் 99,56,683 சேலைகள் உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு சரகத்தில் 8,567 தறிகளில் 56,78 , 804 வேட்டிகள், திருச்செங்கோடு சரகத்தில் 6,500 தறிகளில் 54 லட்சம் வேட்டிகள், கோவை சரகத்தில் 1,080 தறிகளில் 8.20 லட்சம் வேட்டிகள், திருப்பூர் சரகத்தில் 1,228 தறிகளில் 6.37 லட்சம் வேட்டிகள், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில் 80 தறிகளில் 83200 வேட்டிகள் என மொத்தம் 17,455 தறிகளில்· 1,26,19,004 வேட்டிகள் உற்பத்தி செய்ய ஆணை (Ordered to manufacture 1,26,19,004 Dhoti’s out of a total of 17,455 looms.)வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு பகுதி விசைத்தறி நெசவாளர்கள் (Powerloom weavers of Erode region) கூறியது : வழக்கமாக 1.83 கோடி வேட்டி, 1.83 கோடி சேலைகள் உற்பத்தி செய்து வழங்கப்படும். கடந்தாண்டு உற்பத்தி தாமதமாகியதால் 50 லட்சம் வேட்டி, 50 லட்சம் சேலைகள் வரை இருப்பு உள்ளது. இதனால் இந்தாண்டு குறைவாக உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது . முதல்கட்டமாக 6 கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் 3,000 பை நூல்கள்மட்டும் வந்துள்ளன. வேட்டிக்கான கரை நூல், ஊடு நூல் இன்னும் வரவில்லை. சேலைக்கு முழு மையாக நூல் வரவில்லை. அரசை பொறுத்தவரை கடந்த 1 ஆம் தேதி முதல் இலவச வேட்டி , சேலை பணிகள் தொடங்கியதாக கணக்கிடப்படும். ஆனால், விசைத்தறி, கைத்தறி, பெடல் தறியாளர்களால் 3 மாங்களுக்குள் இப்பணியை முடிப்பது சிரமம் . வரும் ஆண்டிலாவது ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள்உற்பத்தி ஆணை வழங்கினால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியும். நெசவாளர்களுக்கும் 6 மாதங்கள் வரை வேலை கிடைக்கும் என்று தெரிவித்தனர்.