Increase in water flow in Hogenakkal : தமிழகம் ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி:Tamil Nadu Hogenakkal Increase in water flow in kaveri river :தமிழக மாநிலம் தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து உள்ளது (The flow of water in Cauvery river is continuously increasing). ஒகனேக்கல் காவிரி ஆற்றில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுவில் இருந்து ஒகனேக்கல்லுக்கு தொடந்து நீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 நாள்களாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஒகனேக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்பரித்துக் கொண்டுகிறது. கர்நாடக, கேரள காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் (Cauvery catchment areas of Karnataka and Kerala)தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, அணையின் முழுக் கொள்ளவு 84 அடியில், நீர் இருப்பு 82.96 கன அடியாக உள்ளது. அங்கு நீர் வரத்து 8,368 கன அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த அணையிலிருந்து 4,917 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதே போல கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) (Krishnaraja Sagar)அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு நீர் வரத்து 23,682 அடியாக உள்ள நிலையில், அந்த அணையில் இருந்து 19,902 அடி நீர் வெளியேற்றப் படுகிறது. இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீர், உபரி நீர் ஆகியவை மொத்தம் 24,873 கன அடி வெளியேற்றப் படுகிறது. கர்நாடகத்தில் பரவலாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றனர். இதனால் அங்கிருந்து இன்னும் அதிக நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகனேக்கல்லுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.