Takaisaal Tamilar award : ஆர் நல்லகண்ணுவிற்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது

தமிழ்நாடு, தமிழர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு (For those who worked for the development of Tamils) தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.

சென்னை: Takaisaal Tamilar award to R Nallakannu : கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தமிழர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு (For those who worked for the development of Tamils) தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தகைசால் தமிழர் விருதுதாளரைச் தேர்வு செய்துள்ளனர். தகைசால் தமிழர் விருதுகாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

ஆர். நல்லகண்ணு அவர்கள் 1925-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி தூத்துகுடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் (Srivaikundam in Thoothukudi District) என்ற ஊரில் பிறந்தார். சிறு வயது முதலே பொதுவுடமை கொள்கையிலும், சமத்துவ சித்தாந்ததிலும் ஈர்க்கப்பட்டு, இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் மூத்த தலைவராக திகழும் அவர், விவசாயிகளின் நண்பராகவும், தொழிலாளிகளின் தோழராகவும் விளங்குகிறார்.

13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India) தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார். எளிமையான வாழ்வை, இயல்பாக வாழ்ந்து வரும் எளிய மனிதர். தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளில் தலைமை தாங்கி உள்ளார். தகைசால் என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர். மூத்த அரசியல் தலைவர். என்னாலும் மக்கள் தொண்டர் ஆர். நல்லகண்ணுவிற்கு 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் தகைசால் விருது வழங்கப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2 ஆயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி (Janashakti) பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த அன்றைய மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனி மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை. பின்னர் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்த அவரது அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.

ஆர். நல்லகண்ணுவின் 80 வது பிறந்த நாளையொட்டி (On the occasion of the 80th birthday) அவருக்கு ஒரு கோடி ரூபாய் வசூலித்து கட்சியினர் கொடுத்தனர். அதை அந்த மேடையில் வைத்து திரும்ப கட்சிக்கே கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி, ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். சாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆர்.நல்லகண்ணு.

Also Read : Income Tax Dept conducts searches in Tn: சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை; ரூ.200 கோடி பறிமுதல்

Also Read : ice President Election : துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி

Takaisaal Tamilar award to R Nallakannu