Vice President Election : துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி

Vice President Election, Jagdeep Dhankar win

தில்லி: Vice President Election, Jagdeep Dhankar win : நாட்டின் துணைக் குடியரசு தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய துணைக் குடியரசு தலைவர் பதவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் (Venkaiah Naidu) பதை காலம் ஆக. 10 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த மேற்கு வங்கத்தின் ஆளுநராக பதவி வகிக்கும் 70 வயது ஜகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்தவரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான 80 வயது மார்கரேட் ஆல்வாவும் போட்டி இட்டனர்.

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர், மக்களவை, மாநிலங்களவையில் உள்ள 725 உறுப்பினர்கள் உள்ளனர். இன்று ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் 725 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் 528 வாக்குகள் ஜகதீப் தன்கருக்கும், 182 வாக்குகள் மார்கரேட் ஆல்வாவிற்கும் கிடைத்தது. 15 வாக்குகள் செல்லாதவையாகி விட்டன.

துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜகதீப் தன்கர் (Jagdeep Thankar) ராஜாஸ்தானைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜகவைச் சேர்ந்த இவருக்கு அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் மார்கரேட் ஆல்வாவிற்கு (Margaret Alva) திமுக, தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தெலுங்கானா ராஷ்டிர சமீதி உள்பட 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இருப்பினும் அவர் 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

துணைக் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு குடியரசு தலைவர், திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி (Prime Minister Narendra Modi) உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளன. ஆக. 10 ஆம் தேதி தற்போது துணைக் குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவி காலம் நிறைவு பெறுவதால், ஆக. 11 ஆம் தேதி துணை குடியரசு தலைவராக ஜகதீப் தன்கர் பதவி ஏற்க உள்ளார்.

அண்மையில் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி திரௌபதி முர்மு (Draupadi Murmu) அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் எதிர்த்து போட்டியில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

Also Read : Monkey pox: குரங்கு அம்மை அச்சுறுத்தலால் சர்வதேச அவசர நிலை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்

Also Read : Takaisaal Tamilar’ award : ஆர் நல்லகண்ணுவிற்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது

Vice President Election, Jagdeep Dhankar win