K. Annamalai : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.அண்ணாமலை

கோவை: Tamil Nadu Chief Minister M.K.Stalin should take action regarding the incidents of petrol bombings: K. Annamalai : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார் . அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது : தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது (Violence has been unleashed on BJP workers in Tamil Nadu). இப்பிரச்னைகள் குறித்து டிஜிபியிடம் பாஜக மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து விசாரிக்க பாஜக சார்பில் நான்கு எம் எல்ஏக்கள் கொண்ட 4 குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அக்குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேத மதிப்பு, பாதிப்பு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்ப உள்ளோம். இந்தக் குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி , நயினார் நாகேந்திரன், சரஸ்வதி (BJP MLAs Vanathi Srinivasan, MR Gandhi, Nayanar Nagendran, Saraswathi) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . பெட்ரோல் குண்டு குறித்து தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

காவல் துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் கூட , தற்போது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காவல் துறை நடுநிலையோடு நடந்து கொண்டால் பாஜக ஒத்துழைப்பு அளிக்கும். கோவையில் தடையை மீறி பாஜக சார்பில் திங்கள்கிழமை கண்டன போராட்டம் நடைபெறும் . வன்முறையை பாஜக விரும்பவில்லை (BJP does not like violence). பாஜக தொண்டர்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும். தொண்டர்களின் அமைதிக்கும் எங்கள் பேச்சுக்கும் ஒரு எல்லை உள்ளது என்றார் .