India vs Australia :ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

ஹைதராபாத்: India won the T20 series against Australia : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது. 3 வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாத்தில் ஆஸ்திரேலியாவை, இந்தியா தோற்கடித்தது.

இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 3 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியே வெற்றி பெற்றது (Australia won the first T20). இரண்டாவ‌து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனிடையே நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 3 வது டி20 போட்டியில் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக விளங்கியது. இதனால் இரு அணிகளும் போட்டியில் வெற்றி பெற முனைப்புடன் விளையாடின.

டாஸ் வென்ற இந்தியா, பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் (Australia batted first) செய்தது. இதில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 186 ரன்களை எடுத்தது. தொடக்க வீரரான கேமரூன் கிரீன் அதிரடியாக ஆட்சி 21 பந்துகளில் 3 சிக்சர், 7 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களை எடுத்தார். அந்த அணியின் பின்ச் 7 ரன்களும், ஸ்மித் 9 ரன்களும், மேக்ஸ்வெல் 6 ரன்களும், வேட் 1 ரன் எடுத்தனர். டிம் டேவிட் 4 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். இந்திய அணியின் அக்சர் பட்டேல் 4 ஓவர்களில் 33 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டை சாய்த்தார்.

வெற்றி பெற 187 ரன்கள் என இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் சோபிக்காமல் 1 ரன்களில் முதல் விக்கெட்டாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீராடி கோலி, சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி, 3 வது விக்கெட்டிற்கு 104 ரன்களை சேர்ந்தனர். சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 36 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். வீராட் கோலி 48 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து 63 ரன்களைச் சேர்ந்தார். ஆஸ்திரேலியா அணியின் டேனில் சாம்ஸ் 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

19.5 வது ஓவரில் பவுன்டரியை விளாசி, வெற்றியை தக்க வைத்துக் கொண்டார் ஹார்திக் பாண்டியா. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவும், தொடர் ஆட்ட நாயகனாக அக்சர் பட்டேலும் தேர்வு செய்யப்பட்டனர் (Suryakumar Yadav was chosen as Man of the Match and Akshar Patel as Man of the series). இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி தென் ஆப்ரிக்கா அணியுடனான‌ 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.