Bus overturns near Villupuram: விழுப்புரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

விழுப்புரம்: More than 30 people were injured in a bus overturn accident near Villupuram. விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நெடி கிராமத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி ஆலகிராமம் வழியாக தடம் எண் -24 அரசு டவுன் பஸ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை வீடூர் பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யனார் ஓட்டி வந்தார் . இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் ஆலகிராமத்தின் வயல் வழி சாலையில் சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு டூவிலருக்கு வழி விட பஸ்சை ஒதுக்கிய போது,அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் அய்யனார் உள்பட 45 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் மற்றும் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது:

விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் தாலுகா சேப்ளாநத்தம் கீழ் பாதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(வயது 24), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கர்ணன் மகன் புவனேஸ்வர்(25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.