Tamil Nadu Chief Minister M.K.Stalin : கரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: TN CM M.K.Stalin is recovering from Corona : கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வருகிறார்.

இது குறித்து காவிரி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM M.K.Stalin) கரோனா தொற்று தொடர்பாக தேவைப்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் பெற மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

அவருக்கு தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து (recovering from Corona) வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது நலமாக உள்ளார் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் (Minister Ma. Subramanian) செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாள்களில், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்புவார் என்றார்.