Bangaluru-Karaikal Express Train : பெங்களூரு-காரைக்கால் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

கோப்புப்படம்

பெங்களூரு : Bangaluru-Karaikal Express Train resumes operation : பெங்களூரு-காரைக்கால் விரைவு ரயில் ஜூலை 25-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே (South Western Railway) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரிலிருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த ரயிலை இயக்க பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை வருவதால், மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜூலை 25-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 25-ஆம் தேதி முதல் ரயில் எண் 16529, பெங்களூரிலிருந்து (From Bangalore) காலை 7.30 மணியளவில் புறப்பட்டு, இரவு 10.35 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.

அதே போல மறு மார்க்கத்தில் ரயில் எண் 16530, ஜூலை 26-ஆம் தேதி முதல் அதிகாலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து (From Karaikal) புறப்பட்டு, இரவு 9.30 மணியளவில் பெங்களூரை வந்தடையும்.

இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் (10 Second Class General Coaches), 2 சரக்கு மற்றும் பிரேக் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.