Tender Fraud case: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஆக. 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சென்னை: tender fraud case against Edappadi Palaniswami: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை பணிகள் (Highway works) மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் சுமார் ரூ.4,800 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 2018ல் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்ததால், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of the Supreme Court) அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆர். எஸ். பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.