Subsidy of Rs.45,000 for dairy cows: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.45,000 மானியம்

சென்ன: Subsidy of Rs.45,000 for purchase of dairy cows for Adi Dravidar tribals. ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள், கறவை மாடுகள் வாங்க திட்டத்தொகை ரூ.1.50 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் htp://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பில் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும், ஆக மொத்தம் 500 நபர்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 7.50 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.2.25 கோடி வங்கி கடன் 487.50 கோடி என முடிவு செய்யப்பட்டு கறவை மாடுகள் வாங்க ஓதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்கு இருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.

இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ. 1,50,000/- இலட்சத்தில் 30% சதவீத மானியம் அதாவது ரூ.45,000/- மானியமாக விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் Mtp://lost.tahuko.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.