1 lakh subsidy for organic agri production units: இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி அலகுகளை நிறுவ ரூ.1 லட்சம் மானியம்

நாமக்கல்: 1 lakh subsidy for setting up organic agricultural inputs production units. இயற்கை வேளாண்மை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி அலகுகளை நிறுவ ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் 2022-23 ஆம் ஆண்டில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மண்புழு உரம், பஞ்காவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீனமிலம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகுளை நிறுவ, இயற்கை விவசாய ஆர்வலர் குழு/ இயற்கை விவசாய மகளிர் குழு/ உழவர் உற்பத்தியாளர் குழு/ பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்ட விவசாயிகள் குழுக்களுக்கு மானிய உதவியாக அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 3 அலகுகளுக் ரூ.3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர்/ சிறு/ குறு/ பெண் விவசாயிகள் அடங்கிய குழுக்கள் மற்றும் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்திடும் கிராம பஞ்சாயத்துகளைச் சார்ந்த விவசாயிகள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல்விளக்க அலகாகப் பராமரிக்க அனுமதிக்க வேண்மும். இது தொடர்பான உறுதிமொழிப் பத்திரம் பயனாளிகளிடம் பெற்றுக் கொdraப்படும். தேர்வு செய்யப்பட்டபின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியை தொடர வேண்டும்.

மானியம் பெறும் குழு திட்டக் கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

திட்டத்தில் பயன் பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை (Detailed Project Report) வருகிற அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

எனவே, விருப்பமுள்ள குழுக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.