State Fodder Development Project in Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தி திட்டம்

நாமக்கல்: State Fodder Development Project in Namakkal District. நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் ” தீவன தொழிலதிபர்” என்ற திட்டத்தின் கீழ் வட மேற்கு மண்டலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு நபரை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 3200 மெட்ரிக் டன் ஊறுகாய்புல் தயாரித்து விவசாயிகளுக்கு விற்க ஒரு விவசாயிக்கு 25% மானியம் அல்லது ரூ.10.50 லட்சம் விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் / பால் பண்ணை உரிமையாளார்கள் / சுய உதவி குழு அல்லது ஊறுகாப்புல் தயார் செய்து இம்மாநிலத்தில் தேவைப்படும் விவசாயிகளுகுகு 5 வருடகாலம் நியாயமான விலைக்கு விற்க தயாராக உள்ளோர் விண்ணப்பம் அளிக்கலாம். பெண்/ எஸ்சி / எஸ்டி வேலையிங்கா பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுன்னோர் கடந்த 5 வருடங்களில் இது போன்ற வேறு திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி கொண்ட மர / பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பங்காண்டு தீவன பயிர்களான தீவன சோளம் | கம்பு நேப்பையர் ஒட்டுப்புல் / பயறுவகை / பல்லாண்டு தீவன புல்வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000/முதல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7000/- வரை மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தில் KAVIADP கிராமத்தில் உள்ள சிறு குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே தகுதிவாய்ந்த நபர்கள் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் இரு திட்டங்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியலே இறுதியானது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.