Sports Day Opening Ceremony: விளையாட்டு தின தொடக்க விழாவை தொடங்கி வைத்த புதுவை சபாநாயகர்

புதுச்சேரி: புதுவை கவுண்டன் பாளையம் (Sports Day Opening Ceremony) முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் அணி நடை, யோகாசனம், நடனம், பிரமிடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பந்து சேகரிப்பு போட்டி, பெற்றோர்களுக்கு லக்கி சர்கிள் உள்ளிட்ட போட்டிகளும் நடந்தது. இந்த விளையாட்டுகள் வந்திருந்த அனைவரையும் கவர்ந்திருந்தது.