இண்டூர்: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட (Special camp for cattle) இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட தூக்கனாம்பள்ளத்தில் இன்று கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், குடற்புளுநீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், தாது உப்புக்கலவை வழங்குதல், தடுப்பூசி போடுதல், தீவனப்பயிர் சாகுபடி விளக்கம், கன்று வளர்ப்புமுறைகள், மழைகால நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் சிறந்த கன்று வளர்போருக்கும், சிறந்த கறவை பசு வளர்போருக்கு தி.மு.க. பிரமுகர்கள் வைகுந்தன், பெரியண்ணன் மற்றும் பா.ம.க. பிரமுகர் பெரியசாமி உள்ளிட்டோர் பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினர். இம்முகாமில் தருமபுரி மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், தருமபுரி கோட்ட உதவி இயக்குனர் மணிமாறன் மற்றும் மருத்துவர்க
ள் தசரதன், பொற்செழியன், மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தருமபுரி பேராசிரியர் டாக்டர் எம்.கண்ணதாசன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்குப்பெற்று பயனடைந்தது.