Social activists: சிக்கமகளூர் மாவட்டம் இயற்கை எழில் கொண்ட மாவட்டம் எங்கு பார்த்தாலும் மரம் செடி கொடிகள் அதிகமாக இருக்கும் சிக்கமகளூரில் இருந்து கடூர் செல்லும் சாலையில் சக்கராயப்பட்டணா மற்றும் பானாரா சாலையை புதுப்பிப்பதற்கு மாநில நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது இதற்கென கப்பஹள்ளி என்னும் கிராமத்து அருகே உள்ள 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை வனத்துறைக்கு அனுமதி கேட்டுள்ளது ஆனால் இதற்கு சமூக ஆர்வலர் கரிஸ் மற்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மரங்களை வெட்டாமலே சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும் உதாரணத்திற்கு

சிக்கமகளூரில் இருந்து தரிகெரெ செல்லும் சாலையில் கடந்த பத்தாண்டிற்கு முன்பு மரங்களை வெட்டாமல் சாலை போட்டதை உதாரணத்தை காண்பித்துள்ளார ஆகையால் மரத்தை வெட்டாமல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
அதேபோல சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா குட்டஹட்டி என்னும் பகுதியில் காட்டுக்குள் பல இடங்களில் மரங்களை வெட்டி உள்ளது தெரிய வந்துள்ளது இந்த மரங்களை ஆய்வு நடத்திய வனத்துறை அதிகாரி சௌமியா வெட்டப்பட்டுள்ள மரங்களை பனகல் பகுதியில் உள்ள மர அறுவை மில்லில் போட்டு உள்ளது தெரியவந்துள்ளது அங்கு இருப்பவர்களிடம் கேட்டால் வன ஊழியர்கள் கொண்டு வந்து இதை வெட்டி கொடுக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆனால் திருடப்பட்டதா அல்லது யார் இது சம்பந்தமானவர்கள் என்பது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சௌமியா தெரிவித்துள்ளார்



