Chief Minister M.K.Stalin : செப். 15 இல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: Sep. 15th Breakfast Program Launched: Chief Minister M.K.Stalin : தமிழகத்தில் செப். 15 ஆம் தேதி முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் விருதுநகரில் செப். 15 ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவை ஒட்டி அக்கட்சியினருக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் (A letter written by M.K.Stalin) தெரிவித்துள்ளதாவது: திமுக எனும் கட்சியினை காத்திட தங்களை அர்ப்பணிக் கொண்ட கட்சியின் மூத்த முன்னோடிகளை மதித்து, கௌரவித்து போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கிடும் நிகழ்வை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் தொடர்ந்து அவற்றை வழங்கியும் வந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன் உள்ளிட்ட 5 பெரும் விருதுகள் (5 major awards including Periyar, Anna, Karunanidhi, Bharathidasan) முப்பெரும் விழாவில் வழங்கப்படும். இத்தனை சிறப்புமிக்க இந்த விழா நிகழாண்டு செப். 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, செப். 15 ஆம் தேதி முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் மகத்தான திட்டம் தொடங்கப்பட உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம் திராவிட இயக்கம்தான் (100 years ago, the Dravidian Movement was the movement that provided free school meals). அன்று நீதிக்கட்சி இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிகட்சியின் நீட்சியாக, திமுகவின் திராவிட மாடல் அரசு, இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக காலை சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது.

மேலும் முரசொலியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட உள்ளது (54 volumes of letters written by M. Karunanidhi are to be published). எனவே முப்பெரும் விழாவிற்கு கட்சியினர் அனைவரும் வருக என அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.