AIADMK ex-ministers SP Velumani, C Vijayabaskar : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை: SP Velumani, C Vijayabaskar houses and related places raided by Anti-Corruption Bureau : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முன்பு நடைபெற்ற அதிமுக ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் சி.விஜயபாஸ்கர் (C Vijayabaskar). இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, நவம்பர், 1 அன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்னர் 2016 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்று மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

அப்போது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி (Permission to start a new medical college) வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லம், அலுவலகம், ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும் சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல அதிமுக ஆட்சியில் கராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி (SP Velumani) இல்லம், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். 2011ல் முதன் முதலாக தமிழக அமைச்சராக பதவியேற்ற இவர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் அமைச்சராக பதவி வகித்தப்போது, தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் (In a project to convert street lights to LED lights), தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கி, அரசுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 2019, 2020 ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை காலை கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம், அலுவலகம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.