Senior Communist leader Nallakannu : தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு

சென்னை: Senior Communist leader Nallakannu presented the cash check to the Chief Minister’s Relief Fund : தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ. 10 லட்சத்திற்கான காசோலையுடன் தான் சேர்த்து வைத்திருந்த ரூ. 5 ஆயித்தையும், முதல்வரின் நிவாரண நிதிக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு வழங்கினார்.

சென்னையில் திங்கள்கிழமை தமிழக அரசு சார்பில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன், பாராட்டு சான்றிதழ், ரூ. 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது (A cash check for 10 lakhs was issued). காசோலையை முதல்வர் ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்ட நல்லகண்ணு, பின்னர் தான் பெற்றுக் கொண்ட ரூ. 10 லட்சத்திற்கான காசோலையுடன் தான் சேமித்து வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தையும் சேர்ந்த ரூ. 10.05 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். இது தமிழக மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

நல்லகண்ணுவின் 50 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ. 1 கோடி நிதி வழங்கப்பட்டது (1 crore fund was provided). அந்த நிதியையும் அவர் அப்போதே கட்சிக்கு வழங்கிவிட்டார். 2008 ஆம் ஆண்டு அவருக்கு அம்பேத்கர் பெயரிலான விருதை தமிழக அரசு வழங்கி, ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது. அந்த தொகையில் பாதியை கட்சிக்கும், பாதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அவர் வழங்கி விட்டார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் 75 சுதந்திர தினம் மிகவும் சிறப்பு மிக்கது. இந்த தினத்தில் என்னை அங்கீகரித்து விருது வழங்கி கௌரவித்த முதல்வருக்கு நன்றி (Thanks to the Chief minister) தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே அரசுக்கு நிதித் தேவை உள்ளது. எனவே எனக்கு அளித்த பரிசுத் தொகையை அரசிடமே மீண்டும் கொடுத்து விட்டேன். மாநிலம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், மாநில உரிமைகளை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். மாநிலத்திற்கு தர வேண்டிய நிதி உள்ளிட்டவைகளை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

அரசியல்வாதிகள் என்றாலே சுயநலமிக்கவர்கள், ஊழல் செய்பவர்கள் (Selfish and corrupt people) என்ற எண்ணம் மக்களிடையே தோன்றி உள்ள தற்போதைய சூழலில் நல்லகண்ணுவின் இந்த செயல், அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்களுக்கு ஒரு உதாரணமாக விளங்கி உள்ளது, அவரின் இந்த செயலால் அரசியல்வாதிகள் மீதான மதிப்பும் உயர்ந்துள்ளது. அரசியல்வாதிகள் நல்லகண்ணுவை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

1925 ஆம் ஆண்டு டிச. 25 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் (Tuticorin District) ஸ்ரீ வைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு, பள்ளி பருவத்தில் அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் அவர் பதவி வகித்தார். நல்லகண்னு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.