Banned plastic Seized : பெங்களூரில் தடை செய்ய‌ப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

பெங்களூரு : Seizure of banned plastic items : பெங்களூரில் சுற்றுசூழலில் மாசு அதிகரித்ததால் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க, ஜூலை 1 ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த‌ தடை உத்தரவை பெங்களூரில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

மாநில அளவில் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை (Awareness programs)மாநில அரசு மேற்கொண்டது. மைசூரு உடையாரின் அரச குடும்பத்தின் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ் உடையார், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டார். இவர் இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலுக்கு ஊக்கமளித்து வந்தார்.

இந்த நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் தாசர்ஹள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள 2 பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைளில் தடை செய்யப்பட்ட 810 கிலோ பிளாஸ்டிக் (810 kg of plastic) பொருள்களை பறிமுதல் செய்தனர்.

க‌ர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தாசரஹள்ளி மண்டல திடக்கழிவு மேலாண்மை துறை கண்காணிப்பாளர் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மார்ஷல் மேற்பார்வையாளர் மற்றும் பிற அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யத பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இனி தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது (Do not make or use) என தொழில்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

தாசர்ஹள்ளி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை துண்டு, துண்டுகளாக வெட்டி ஏலம் (Auction)விட்டு அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் (Environment) அபாயங்களில் ஒன்றாகும். பிளாஸ்டிக் காரணமாக மழை வெள்ளம் உள்பட மற்ற மாசு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதனைத் தொடர்ந்து உற்பத்தி தொழில்சாலைகளை சோதனை செய்வோம் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் (CPCB) தலைவர் சாந்த திம்மையா ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.