Special Train Extended: செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் பிப்ரவரி வரை நீட்டிப்பு

மதுரை: Secunderabad – Ramanathapuram special train extended till Feb. செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவையை பிப்ரவரி இறுதி வரை தெற்கு மத்திய ரயில்வே நீட்டித்துள்ளது.

செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வரை நீட்டிப்பதாக மண்டல ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எண் 07695 செகந்திராபாத் – ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் பிப்ரவரி 1 முதல் 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

எண் 07696 ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் பிப்ரவரி 3 முதல் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில்கள் நல்கொண்டா, மிரியல்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை, சிவகரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.