அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை

அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை
அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை

Scholarship for students: வருகிற கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்., அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், கட்டண உயர்வு என புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இது குறித்து இன்றைய தினமே அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், நீட் தேர்விற்கு பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், கலந்தாய்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். பொறியியல் கலந்தாய்வுக்கு செல்போனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் படித்த பள்ளிகளிலேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் (scholarship for college students) வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, பெண்களுக்கான பல திட்டங்களை அறிவித்ததுடன் அதை ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில், ‘மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின்’ கீழ், இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவிகளின் மேல்படிப்புக்கும் மாதம் தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், வருகிற கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு