Earthquake in Kodagu: குடகில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி

கர்நாடகம்: Earthquake in Kodagu: குடகில் மாவட்டத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குடகு மாவட்டத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. குடகு மாவட்டம் செம்பு கிராமத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1.24 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த‌ மாவட்டத்தில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மடிகேரி மட்டுமின்றி, தென் கன்னட மாவட்ட‌த்தில் உள்ள சுள்யா, சம்பாஜே, கூனடுகா, கல்லுகுந்தி உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் பீதியும், கவலையும் அடைந்துள்ளனர்.

முன்னதாக 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பேரிடரால் குடகு மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக இருந்தது. மாநில பேரிடர் மேலாண்மை பிரிவும் இதை உறுதி செய்துள்ளது. நிலநடுக்கத்தால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்துடன், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இடைவிடாது மழையும் பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக பெய்த மழையால் மங்களூரில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மடிகேரி மற்றும் உடுப்பியில் கனமழை பெய்து வருவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.