partially train cancelled : இன்று முதல் சேலம்-கோவை வரையிலான‌ ரயில் பகுதியாக ரத்து

கோப்புப்படம்

சேலம் : partially special passenger train cancelled : ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை முதல் சேலம்- கோவை வரை பகுதியாக பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம்-கோவை இடையிலான பயணிகள் ரயில் (Salem-Coimbatore special passenger train) ஜூலை 13-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவரை இந்த ரயில் கோவை-ஈரோடு வரை இயக்கப்பட உள்ளது.

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்தப்போது பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது பயணிகள் ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்-கோவை பயணிகள் ரயில் (Salem-Coimbatore special passenger train) சேவை, 2 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஈரோடு காவிரி-ஆனங்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை-சேலம் சிறப்பு பயணிகள் ரயில் (06802) (Coimbatore-Salem special passenger train) ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி, 24-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் கோவை-ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் சேலம்-கோவை சிறப்பு பயணிகள் ரயில் (06803) ) (Salem-Coimbatore special passenger train) ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி, 24-ஆம் தேதி வரை சேலம்-ஈரோடு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, இந்த ரயில் ஈரோடு-கோவை இடையே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.