Rs. 4,758 crore central govt release for TN: தமிழகத்திற்கு ரூ. 4,758 கோடி மத்திய அரசு விடுவிப்பு

புதுடெல்லி: Rs. 4,758 crore central government release for Tamil Nadu: மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் மாதாந்திர தொகையாக தமிழகத்திற்கு ரூ. 4,758.78 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 58,332.86 கோடிக்கு பதிலாக, இரண்டு தவணைகளுக்குரிய ரூ. 1,16,665.75 கோடியை இன்று (ஆகஸ்ட் 10, 2022) மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநில அரசுகள் தங்களது மூலதனம், வளர்ச்சி செலவுகளை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசின் உறுதிபாட்டின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு ரூ. 4,758.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநில வாரியான விநியோகம்:

வரிசை எண்மாநிலத்தின் பெயர்மொத்தம் (ரூ. கோடி)
1ஆந்திரப் பிரதேசம்4,721.44
2அருணாச்சல பிரதேசம்2,049.82
3அசாம்3,649.30
4பீகார்11,734.22
5சத்தீஸ்கர்3,974.82
6கோவா450.32
7குஜராத்4,057.64
8ஹரியானா1,275.14
9ஹிமாச்சல பிரதேசம்968.32
10ஜார்கண்ட்3,858.12
11கர்நாடகா4,254.82
12கேரளா2,245.84
13மத்திய பிரதேசம்9,158.24
14மகாராஷ்டிரா7,369.76
15மணிப்பூர்835.34
16மேகாலயா894.84
17மிசோரம்583.34
18நாகாலாந்து663.82
19ஒடிசா5,282.62
20பஞ்சாப்2,108.16
21ராஜஸ்தான்7,030.28
22சிக்கிம்452.68
23தமிழ்நாடு4,758.78
24தெலுங்கானா2,452.32
25திரிபுரா826
26உத்தரப்பிரதேசம்20,928.62
27உத்தரகாண்ட்1,304.36
28மேற்கு வங்காளம்8,776.76
 மொத்தம்1,16,665.72

கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி உள்பட). ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2-வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது.

புதுச்சேரியில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது.

ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ. 32,365 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 26,774 கோடியும் அரசு வழங்கியுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் வழக்கமான பைசலுக்கு பின் சிஜிஎஸ்டிக்கு ரூ.58,116 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 59,581 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில் 2022 ஜூலை மாத வருவாய் அதைவிட 28 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது.